இன்று காலை அம்பாரை ஆலங்குளம், தீகவாப்பி பிரதேசத்தில் அப்பிரதேச விவசாயிகளுக்கும் அக்கரைப்பற்று பொலிசாருக்குமிடையே பெரும் மோதலொன்று வெடிப்பதற்கான பரபரப்பான பதட்டநிலை அதிகாலை முதல் ஏற்பட்டது.
கரும்புச் செய்கைக்காக ஒதுக்கப்பட்டு ஒன்றுமே செய்கை பண்ணப்படாமல் கைவிடப்பட்டிருந்த தமது நிலங்களில் நெற்செய்கை பண்ணும் நோக்கத்துடன் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆலங்குளம், தீகவாப்பி, நுறைச்சோலை பிரதேச விவசாயிகள் உழவு இயந்திரங்கள், மண்வெட்டி உபகரணங்கள் சகிதம் ஒன்று கூடினர்.

ஆயினும் அதிகாலையிலேயே அங்கு குவிக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிசார் அவர்களை அவ்வாறு செய்யவிடாது இரண்டு மூன்று இடங்களில் தடுத்துக் கொண்டிருந்தனர்.
இதனால் இப்பிரதேசத்தில் பதட்டமும் முறுகல்நிலையும் காணப்பட்டது. இதையறிந்து அப்பிரதேசத்திற்கு விரைந்த கிழக்குமாகாண முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் ஜனாப்.எஸ்.எல்.எம்.பழீல் ஏற்படவிருந்த
மோதல்,முரண்பாடு,என்பவற்றைத்தவிர்த்து இரு தரப்பினரிடையேயும் பேசி நிலைமையை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வந்தார்.சி.ல.மு.காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ. ரஊப் ஹக்கீம், சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன்அலி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜனாப்.ஜெமீல்,அம்பாரை அரசாங்க அதிபர் ஆகியோருடன் தொடர்புகொண்டு கள நிலைமைகளை ஜனாப்.பழீல் விளக்கினார்.
தொடர்ந்து அமைச்சர் ஹக்கீம் அம்பாரை டி.ஜ.டி.பொலிஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருடனும் தொடர்பு கொண்டு ஏழை விவசாயிகள் தமது காணிகளில் உடனடியாக நெற்சாகுபடி செய்யவேண்டியதன் அவசியத்தையும், அது விவசாயிகளுடைய மறுக்கப்படமுடியாத உரிமை யென்பதனையும் அதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் விளக்கியதாக தெரியவருகின்றது.
கடந்த ஏப்ரல்21ம் திகதி இதுசம்பந்தமான உயர்மட்ட மகாநாடு கொழும்பில் நடைபெற்றது.
அதில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் காணிகளை விவசாயிகளுக்கு இவ்வருடம் டிசம்பர்மாதம் வரையில் நெற்செய்கை பண்ணுவதற்கு அனுமதிக்க இணங்கியதாகவும் கடந்தவாரம் அரசஅதிபர் விவசாயம் செய்வதற்கான நீர்வசதியைப் பெற்றுத்தருவதற்குக்கூட இணக்கம் கண்டதாகவும் இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.

இன்னும் ஒருவாரகாலத்தில் மீண்டும் கொழும்பில் பிரதமரின் தலைமையில் நடைபெறவுள்ள உயர்மகாநாட்டில் இப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காண்பதற்கு தலைவர் ஹக்கீம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இணைப்புச்செயலாளர் ஜனாப். பழீல் மேலும் தெரிவித்தார்.