செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது.
ராஜ் ராஜரட்ணமும் கலன் இன்டர்நஷனல் மாஸ்டர் பஃண்ட் நிறுவனமும் அனுப்பிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கியின் அனுமதியின்றி, அவர்களின் சார்பில் ஸ்ரான்டர்ட் சார்ட்டட் வங்கியின் கிருளப்பனை கிளையில் வைப்பில் இடுவதற்கு ரெக்ஷியா கோன்ப்ரேட் நிறுவனத்திற்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்ததாக ரவி கருணாநாயக்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
