கலைமகன்-
அம்பாறை மாவட்டதின் நற்பட்டிமுனை பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் உருவான நெசவு பயிற்சி நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் Y.L.சாஹுல் ஹமீட் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
இந்நெசவு பயிற்சி நிலைய திறப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விவகார பணிப்பாளரும், சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாள நாயகமுமான அன்வர் எம் முஸ்தபா, குடிசை கைத்தொழில் அதிகார சபை இணைப்பாளர் அப்துல் லத்தீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹம்மத் முபீத், கட்சியின் கிழக்கு மாகான இணைப்பாளரும் மைகோப் நிறுவன அதிபருமான சித்தீக் நதீர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அல் ஹரீம் நெசவு மற்றும் கைத்தொழில் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.(ந)




