குவைத்தில் நடைபெற்ற 10ஆம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த10ஆம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மௌலவவி எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் மே 14, 2015 அன்று இரவு குவைத்தில் உள்ள கைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. 

வெள்ளிக்கிழமை (15.05.2015) அன்று நண்பகல் அதே பள்ளிவாசலிலும், அன்று மாலை ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலிலும் நடைபெற்றன. சனிக்கிழமை (16.05.2015) அன்று ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிறைவுற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி, மேலப்பாளையம், உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வரும், மஜ்லிஸுல் உலமா சபை தலைவருமான மௌலவீ எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மூன்று நாட்கள் இரண்டு இடங்களில் தொடராக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 1,800 (ஆயிரத்து எட்டு நூறு) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் இரவு உணவுகளும், தேநீரும் வழங்கப்பட்டன.(ந)













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -