ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தெரிவித்துள்ளது.
எந்தவிதமான பதவி அதிகாரத்தையும் பயன்படுத்தாது நேரடியாக தாமே சென்று பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆராய்ந்து, குடும்பத்தினருக்கு இரங்கல் செலுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பண்பு பாராட்டுக்குரியது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் எவரையேனும் அனுப்பி இரங்கல் தெரிவித்திருக்க முடியும் என்ற போதிலும் அவர் நேரடியாகவே சென்றமை வரவேற்கப்பட வேண்டியது என ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான குற்றச் செயல் இதுவெனக் குறப்பிட்டுள்ளார்.ச
