அரபு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் சவுதி மன்னர் கலந்து கொள்ளமாட்டார்!

வாஷிங்டனில் நடைபெற உள்ள அரபு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சவுதி மன்னர் சல்மான் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நாளையும் நாளை மறுநாளும் 6 நாடுகள் கொண்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம், சிரியா மற்றும் ஏமன் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என சவுதி மன்னர் சல்மானுக்கு வெள்ளை மாளிகை வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், இந்த மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். ஆனால், மன்னருக்குப் பதில் அவரால் நியமிக்கப்பட்ட பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குவார் என சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -