தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் எங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது-அமீர் அலி

ந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பெறப்பட்ட இந்த நல்லாட்சியின் பயனாக நாம் நமது பிரதேசங்களிலே அதன் பிரதிபளிப்புக்களை தற்போது காணக்கூடியதாகவுள்ளதாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் எங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது அதன் மூலம் கிடைக்கும் கடன் திட்டத்தின் மூலம் கடன்களைப் பெறும் அனைவரும் சமுர்த்தி அதிகாரிகளின் வழிகாட்டலில் முன்னேற்றம் அடைந்து பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக திவிநெகம முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எ.பஸீர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.கணரட்னம், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.நௌபல், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 450 திவிநெகும பயனாளிகளுக்கு நாலு கோடியே முப்பது லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக திவிநெகம முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எ.பஸீர் தெரிவித்தார்.
sa


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -