யு.எம்.இஸ்ஹாக்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன கூட்டத்தில் சதோச நிறுவனத்தின் பணிப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி .எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.ஹலீம் ஆகியோருக்கு கௌரவிப்பு இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸதீன் தலைமையில் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் 26.05.2015 அன்று நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய ஆரம்பப் பிரிவு ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.
இன்று நடைபெற்ற இக்கூட்டதுக்கு அனுசரணை வழங்கிய நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.ஹலீம் சம்மேளனத்தின் உப தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் நற்பிட்டிமுனை ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக் ஆகியோரால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .
அதே போன்று நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்தவரான சதோச நிறுவனத்தின் பணிப்பாளர் பதவி பெற்ற கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி .எம்.முபீத் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.பகுர்தீன் ஆகியோரால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார்.
இந்த நிகழ்வில் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் , நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி நிலையத்தில் பயிற்சி பெறும் யுவதிகளும் ,போதனாசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.(ந)