அபூ இன்ஷப்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட சம்மேளன தலைவராக சம்மாந்துறையைச் சேர்ந்த ஹபீப் முஹம்மட் ஹாலித் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
22.05.2015 அன்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிசீரகுமார தலைமையில் நடைபெற்ற வைபவத்தின் போதே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வைபவத்தில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க மற்றும் மேலதீக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை ஹூசைனியா இளைஞர் கழகத்தின் தலைவராகவும் முன்னாள் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார்.
இவர் தற்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள 504 இளைஞர் கழகங்களினதும் தலைவராக அதாவது மாவட்ட சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.(ந)