றியாஸ் இஸ்மாயில்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக இன்று இரவு அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள முக்கிய ஒன்று கூடலின் போது அறிவிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தமது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஏ.எல்.தவம் போட்டியிடுவதன் மூலம் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதுஎன்பதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பதவி விலகும் பட்சத்தில் அடுத்ததாக சம்மாந்துறை மாஹீர் தெரிவாக சந்தர்ப்பம் உள்ளது.
.jpg)