ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 20வது திருத்தச் சட்டம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அமைச்சரவையில் எதிர்வரும் 13ம் திகதியும் பாராளுமன்றத்தில் இம் மாதம் 19ம் திகதியும் குறித்த திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தேர்தல் முறை மாற்றங்களை உள்ளடங்கிய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேர்தல் மாற்றங்கள் அடங்கிய திருத்தச் சட்டம் தொடர்பில், நாளை இடம்பெறவுள்ள அணைத்துக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில், இணக்கப்பாடு எட்டப்படவில்லையாயின் பாராளுமன்றத்தை கலைக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படின் எதிர்வரும் 13ம் திகதி அமைச்சரவையில் இந்த திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படும் என, ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டதாக, அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வீ
