எம்.ஜே.எம்.சஜீத்-
எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் விசேடமாக மக்களுக்கு 24 மணித்தியாலயங்களும் தனது பணிகளை செய்யக்கூடியவர்களாக எமது பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் காணப்படுகிறார்கள் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தெரிவித்தார்.
ஒய்வு பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர்களான எம்.ஏ.எம்.சலீம், எஸ்.எல் யாஹூப் போன்றோர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிராம சேவகர் எம்.ஐ.எம். அஸ்கர் தலைமையில் அக்கறைப்பற்று அசியன் சீப் ஹோட்டலில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் , அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவின் கணக்காளர் ஏ.எல்.நஜிமுத்தின்,' அம்பாறை மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தௌபிக் உட்பட அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கிராம சேவகர்களும் கலந்து கொண்டனர்.sa
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)