ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து சாம்பியன்ஸ் ‘லீக்’ 20 ஓவர் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2009–ஆம் ஆண்டு இந்த போட்டி முதல் முறையாக நடத்தப்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து ‘சாம்பியன்ஸ் லீக்’ போட்டியை நடத்துகின்றன.
இதுவரை நடந்த 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன. நியூசவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் தலா 1 முறை சாம்பியன் பட்டம் பெற்றன.
இந்த ஆண்டுக்கான 7–ஆவது சாம்பியன் ‘லீக்’ போட்டி குறித்து இதுவரை எதுவும் தெளிவுப்படுத்தப்படவில்லை.
ஐ.பி.எல். போட்டி அளவுக்கு சாம்பியன்ஸ் ‘லீக்’ ஆட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இதனால் இந்தப்போட்டியை அடியோடு ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் ‘லீக்’ போட்டிக்கு மாற்றாக வேறு ஒரு போட்டியை நடத்தும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.(ந)
