பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றில் 09-05-2015 சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இத் தீ விபத்தினால் பல கையடக்க தொலைபேசி உபகரணங்கள் உட்பட தொழில்நுட்ப உபகரணங்களும், கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையமும் சேதமடைந்துள்ளது.
மேற்படி கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையம் தீப்பற்றிக்கொண்டதையடுத்து அதனை கண்டவர்கள் பொது மக்களின் உதவியுடன் தீ ஏனைய பகுதிக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தசநாயக்க, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர, காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் , காத்தான்குடி பொலிஸ் நிலைய நிருவாகப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெயசீலன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)