இறந்தவர் 1 மணி நேரத்தில் மீண்டும் உயிருடன் எழுந்தார்!

ரணம் அடைந்தவர்களில் சிலர் இறுதி சடங்கு முடிந்து இடுகாட்டுக்கு தூக்கி சென்றபின் உயிருடன் மீண்டதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன. அது போன்ற சம்பவம் தற்போது அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் விஸ்கான் சின் மாகாணத்தில் உள்ள மில்வாயூகி என்ற இடத்தில் அடுக்கு மாடி வீடு இடிந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி கிடந்த 46 வயது ஆண் நபரை மீட்டனர். அந்த நபர் உடல் அசைவு மற்றும் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார். உடல் முழுவதும் ‘ஜில்’ என்று இருந்தது. அவரை பரிசோதித்த மீட்பு குழுவினர் அவர் இறந்து விட்டதாக கருதினர்.

எனவே, அவரது உடலை பிணவறைக்கு தூக்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே ஒரு மணி நேரத்துக்கு பிறகு இறந்ததாக கருதப்பட்ட நபரின் கை கால்கள் அசைந்தன.

நின்ற மூச்சு மீண்டும் வந்தது. அதை தொடர்ந்து உயிர் பிழைத்த அவர் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -