பிறந்த குழந்தையை வடிகானில் வீசிய திருமணமாகாத பெண்- மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்!

லை­ய­டி­வேம்பு கோளாவில் பிர­தேச வடிகான் ஒன்­றி­லி­ருந்து கைவி­டப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்­தே­கிக்­கப்­படும் பெண்­ணொ­ரு­வரை நேற்று முன்­தினம் இரவு கைது செய்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.

பொலி­ஸா­ருக்கு பெண் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கிடைத்த இர­க­சிய தக­வ­லொன்றை அடுத்து பொலிஸார் கோளாவில் பிர­தே­சத்தில் வைத்து குறித்த பெண்ணைக் கைது செய்­துள்ளனர். திருமணமாகாத இந்தப் பெண், எற்கனவே இரண்டு குழந்தைகளை பிரசவித்து இப்படி கைவிட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர். கைது செய்­யப்­பட்ட பெண் மருத்­துவப் பரி­சோ­த­னைக்­காக அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

ஆலை­ய­டி­வேம்பு கோளாவில் பிர­தே­சத்தில் கடந்த 22ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பி.ப. 12.30 மணி­ய­ளவில் வடிகான் ஒன்­றி­லி­ருந்து கைவி­டப்­பட்ட நிலையில் கிடந்த ஆண் சிசு­வொன்றை அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் கண்­டெ­டுத்தார். பொலி­ஸா­ருக்கும் தகவல் கொடுத்தார்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் குறித்த சிசுவை அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையின் சிறுவர் பரா­ம­ரிப்புப் பிரிவில் அனு­ம­தித்­துள்­ளனர். பொலிசாரின் விசாரணையில், அந்தப்பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டு கைதாகியுள்ளார். இவர், ஏற்­க­னவே இரு பிள்­ளை­களை இவ்­வாறு பிர­ச­வித்­துள்­ள­தா­க கூறப்படுகிறது.

இதே­வேளை, கைவிடப்பட்ட இந்த சிசுவை தத்தெடுத்து வளர்க்க இரண்டு பெண்கள் முன்வந் துள்ளதாக தெரிகிறது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -