”வணிகத்துறை மாணவர்களை குழப்ப வேண்டாம்”என பொத்துவிலில் துண்டுப்பிரசுரம் வெளியீடு!

பொத்துவில் நிருபர் இர்ஸாத் ஜமால்தீன்-

அன்பார்ந்த மாணவர்களே! பெற்றோர்களே!

2014 இல் ஓ/எல் பரீட்சையில் தோற்றி 2015 இல் வணிகத் துறையை தேர்வு செய்திருக்கின்ற மாணவர்களை தெளிவூட்டுவதும் அறிவூட்டுவதுமான நோக்கத்தைக் கொண்டமைந்ததே இத்துண்டுப் பிரசுரமாகும்.

2006 இலிருந்து நிந்தவூர் போன்ற பிரதேசங்களுக்குச் செல்லாமல் பொத்துவில் பிரதேசத்தில் மாத்திரம் கல்வி பயின்று சிறந்த பெறுபேறுகளையும் உயர்ந்த மாவட்ட நிலை களையும் பெற்று தற்போது பல்கலைக் கழகங்களில் கல்விகற்றுக் கொண்டிருக்கும் எமதூர் வணிகப் பிரிவு மாணவர்களின் வரலாறுகளை அறிவீர்களா நீங்கள்?

2006 இன் பின்னர் இதுவரை எமதூர் வளங்களை மாத்திரம் பயன்படுத்தி சிறந்த பெறுபேறுகளுடன் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களின் விபரங்களை உங்களின் தெளிவுக்காக பட்டியல் படுத்துகின்றோம்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க மாணவர்கள் வணிகப் பிரிவைத் தேர்வு செய்வதில் தயக்கம் காட்டிவருகின்றமைக்கு பல உண்மைகளைக் குறிப்பிடலாம்.

1.வணிகப் பிரிவில் கற்பதற்காக வெளியூர்களுக்குச் செல்லும் மாணவர்கள் தங்களின் முடிவினை நியாயப்படுத்த பொத்துவிலில் வணிகப்பாடங்கள் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை என பொய்களை இட்டுக் கட்டுகின்றனர். இதனைக் கண்மூடித்தனமாக நம்புகின்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கல்முனை, மருதமுனை, நிந்தவூர் போன்ற பிரதேசங்களுக்கு அனுப்பி பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கிறார்கள். இருப்பினும் பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் கற்காத பெரும்பாலான மாணவர்கள் உயர்தரத்தில் கோட்டை விடுகின்றனர் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்

2. 2015 – 04 – 06 ஆம் திகதி எம்.ஜெ.எம். முபஸ்ஸிர் என்பவரால் அவரது பேஸ்புக்கில் இல் JahfarMufassir   என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆதாரமற்றதும் அறிவீனமானதும் உள்நோக்கம் கொண்டதுமான பொய்யான செய்தி எமதூர் மாணவர்களை மீண்டும் வெளியூர் செல்ல தூண்டியுள்ளமை கல்விச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நடவடிக்கையாகும்.

கடந்த 2014 இல் அல் - இர்பான் மகளிர் கல்லூரியில் வணிகப் பிரிவில் தோற்றிய 05 மாணவிகளில் சரோத் ஜெஹான் 3யு சித்திகளுடனும் பாத்திமா காளிதா 2A,B  சித்திகளுடனும் பொத்துவில் மத்திய கல்லூரியில் இருந்து தோற்றிய றிபாஸ் 2A,B  சித்திகளுடனும் சித்தி எய்துவதற்குக் பாடசாலையிலும் பிரத்தியேகக் கல்வி நிலையங்களிலும் கற்பித்தவர்கள் எமதூரைச் சேர்நத ஆசிரியர்களே என்பதற்கு இம்மாணவர்கள் எவ்விடத்திலும் சாட்சி சொல்வார்கள்.

அப்படியிருந்தும் எமதூரின் வணிகத்துறை ஆசிரியர்கள் நடைமுறை மாற்றங்கள் பற்றி தெரிந்திருத்தல் வேண்டும் என்ற முபஸ்ஸிர் என்பவரின் கூற்று முழுப்பூ சனிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமமாகும்.

Brainy என்ற பிரத்தியேகக் கல்வி நிலையத்தில் வணிகக் கல்விப் பாடத்தை கற்பிப்பதற்காக இவரின் பெயர் 2015 இல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

தனது வரவை மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக தற்போது பொத்துவிலில் வணிகத்துறையின் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த ஆசிரியர்களை விமர்சித்துள்ளார். கடந்தவருடம் வெளியூர் சென்று வணிகப் பிரிவில் கற்ற எத்தனையோ மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைந்த வரலாறை இவரைப் போன்றவர்கள் ஆய்வு செய்து உண்மை நிலையை விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

3.சில தனியார் கல்வி நிறுவனங்களின் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் :-

மேலே பட்டியல் படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களில் ABMஇர்ஸாத், மற்றும் ஏ.ஆர்.முதாசர் ஆகிய இருவரும் பொத்துவில் ஒக்ஸ்போர்ட் பிரேத்திகேக் கல்வி நிலையத்திலும், ஏனைய மாணவர்கள் யாவரும் இக்ரஹ் கல்விக் கல்லூரியில் கணக்கீட்டுப் பாடத்தை - AM .பஸ்மின் ஆசிரியரிடமும், வணிகக் கல்வியை ஆசு. சியாம் ஆசிரியரிடமும் பொருளியல் பாடத்தை - ABM. அஸ்ரப் ஆசிரியரிடமும் பிரத்தியேகமா கக்கற்றார்கள் என்பது ஊரறிந்த உண்மையாகும்.

இம் முன்று ஆசிரியரையும் ஓரம் கட்டி தமது பிரத்தியேகக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் கற்க வரவேண்டும் என்றடிப்படையில் வெளியூரைச் சேர்ந்த கணக்கீட்டாசிரியர் ILA.ஸலாம் மற்றும் வணிகக் கல்வி ஆசிரியர் RM. ஜெலீல் போன்றோர்களின் பெயர்களை குறித்த ஓர் கல்வி நிறுவனம் விளம்பரப்படுத்தி மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றமை எமதூரின் உயர்கல்வி வளர்ச்சிக்குச் செய்யும் துரோகமாகும்.

4.ஒரு சில ஆசிரியர்களின் முட்டாள்தனமான வழிகாட்டலும் சுய நலத்தன்மையும் :-

எமது பிரதேசத்தில் GAQ கற்பிக்கும் ஒரு சிலஆசிரியர்களால் வணிகப் பிரிவின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை. வணிகப் பாடங்களைக் கற்றால் GAQ கற்க முடியாது எனப் பிரச்சாரம் செய்து கலைத்துறையைத் தேர்வு செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றனர். வணிகப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் GAQ கற்பித்துக் கொடுக்கின்ற அற்புதமான ஆசிரியர்களைக் கொண்டதோர் ஊர் எமது பொத்துவில் ஊர்.

5.சில பாடசாலைகளில் தரம் 10, 11 ஆகிய வகுப்புக்களில் சுகாதாரவிஞ்ஞானம், மற்றும் குடியியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதனால் மிகப் பெரும்பாலான மாணவர்கள் அப்பாடங்களைத் தேர்வு செய்வதோடு வணிகக்கல்வியும் கணக்கீடும் என்றபாடத்தை புறக்கணித்து வருகின்றனர். வெளியூர் பிரதேசங்களில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்ற 90 மூ மானமாணவர்கள் தரம் 10 மற்றும் 11 இல் வணிகப் பாடத்தை (Commerce); தேர்வு செய்வதே காரணம் என புள்ளி விபரங்கள் கூறுகின்றது.

வணிகத்துறை மாணவர்களே! 

பெற்றோர்களே மேலுள்ள உண்மைகளை சரியாக விளங்கி தரம் வாய்ந்த கல்வி நிலையத்திலும் பொருத்தமான ஆசிரியர்களிடம் பிரத்தியேகக் கல்வியைப் பெற்று பல்கலைக்கழக வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். வெளியூர் சென்று பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி உங்கள் எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள். பொய்களை நம்பி ஏமாறாதீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -