கட்டாரிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள மருதமுனை மண்ணில் பிறந்த சம்சுல் அஸாம் ரஷீதின் முழுமையான எண்ணக்கருவில் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகிவரும் Free Visa எனும் குறும்படம் மிக விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் அண்மையில் கட்டார் நாட்டுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம். நசீரின் அழைப்பின் பேரில் படத்தின் இயக்குனர் சம்சுல் அசாம் குழுவினருடனான சந்திப்பொன்று கட்டார் நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் இடம் பெற்றது.
சந்திப்பினை மேற்கொண்ட அசாம் குழுவினர் மருதமுனை மக்கள் தொடர்பிலான மிகவும் பிரதானமான ஒரு கோரிக்கையினை முன் வைத்தனர்.
மருதமுனை சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமமாகும். இன்னும் ஆறாத்துயரில் அம்மக்களின் துயர் துடைக்க யாரும் இல்லாத சூழ்நிலை இன்றும் காணப்படுகிறது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 186 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன அதில் 100 வீடுகளே பயனாளிகளிடம் முறையாக கையளிக்கப்பட்டுள்ளது. மிகுதி 86 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்ட போதிலும் அவை இன்னும் உரியவர் கையில் போய் சேரவில்லை என்பது அம்மக்களின் பெரும் குறையாக கடந்த 6 வருட கலாமாக இருந்து வருகிறது.
தற்போது இவ் வீடுகளுக்குள் நாய் பூனை மாடுகள் தங்குமிடமாக மாறி வருவது குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதனை காலத்துக்கு காலம் வரும் அரசியல் வாதிகளால் காற்றில் பறக்கவிடப்பட்ட நூலறுந்த பட்டம் போல வாக்குறுதி வழங்குவதும் கிடப்பில் போடுவதுமாக உள்ளது
இந்த நிலையிலேயே இதனை நிறைவேற்றி தருமாறே கிழக்கு மாகான சபை உறுப்பினர் நசீரிடம் இந்த குழு கோரிக்கை விடுத்துள்ளது
அத்துடன் இளம் கலைஞ்சர்களை உள்ளடக்கியதாக கலைக்குழுமம் ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகமும் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சமூக மயப்படுத்தும் நோக்கில் இக் கலைக்குழு செயட்படுவதற்கு உந்துதலாக அமைதல் வேண்டும் அந்த வகையில் நாம் இந்த அமைப்பினை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்திருத்ன்தனர்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நசீரின் வாக்குறுதி;
இந்த கோரிக்கை தொடர்பில் நான் நாட்டுக்கு சென்ற உடன் இதற்க்கு உடனடித்த் தீர்வு பெற்று கொடுப்பேன் சம்பந்த பட்ட அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். என்ற உத்தரவாதத்தை இந்த சந்திப்பின் போது வழங்கியுள்ளார். பயனாளிகளுக்கு மிக விரைவில் இந்த வீடுகள் கிடைக்க உதவுவேன் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் உங்களது இந்த Free Visa பட தயாரிப்பு முழுமையாக வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு இதற்கு தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இத்திரைப்படம் இலங்கை மக்களின் பார்வைக்கு தொலைக்காட்சிகள் வாயிலாகவும், உலக மக்களின் பார்வைக்கு சமூக தளங்களினுடாகவும் விரைவில் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் Free Visa குறும்பட இயக்குனர் சம்சுல் அஸாம் ரஷீத் கருத்து தெரிவிகையில்;
இந்த குறும்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது, அத்துடன் இதன் தயாரிப்பின் நோக்கம் சமூகத்தில் குறிப்பாக இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்பிற்கு சென்று எதிர் நோக்கும் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாகும்.
இங்கு பல அரசியல் வாதிகளை சந்திக்க கூடியதாக உள்ளது அவர்கள எல்லோரும் வெறும் வாய் வார்த்தைகளாகவே உள்ளனர். வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே நாம் இதுவரை பார்க்கிறோம்.
நல்லாட்சிக்கான புதிய அரசியல் மாற்றத்தோடு மருதமுனை கிராமத்துக்கு வருகைதந்த அமைச்சர் றிஷாட் பதியுத்தீனிடம் இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மனுவென்றும் கையளிக்கப்பட்டது. இங்கு அமைச்சர் உரையாற்றும் போது 'நான் ஒரு மணி நேரத்துக்குள் முடித்துத்தரும் பிரச்சினை இது எனத் தெரிவித்தார்' பின்னர் சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி நேரடியாக வீட்டுத்திட்டத்துக்கு வருகைதந்து பிரச்சினையை தீர்ப்பதாகவும் மக்களிடம் உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடந்து விடவில்லை அத்தனையும் பொய் வாக்குறுதிகளாகவே காணப்படுகிறது.
பல ஆர்ப்பாட்டங்கள் நடந்து உள்ளது. கண்ட பலன் ஒன்றும் இல்லை. அரசியல்வாதிகள் ஊடக அறிக்கை போட்டு அரசியல் நடாத்துகின்றனர். நிலாவை காட்டி சிறுபிள்ளைக்கு சோறு ஊட்டுவதை போல் மருதமுனையில் வீடு திட்டத்தை காட்டி அரசியல் செய்கின்றனர்.
இந்த நிலையில் எமது சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகிறது. இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகான சபை உறுப்பினர் நசீர் எங்களை சந்திக்க விரும்பினார் நாமும் அந்த சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்தோம்.
தற்போதுள்ள வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு நாம் முதலிடம் கொடுத்தோம் தீர்வை நாடு சென்றதும் பெற்றுத்தருவேன் என கூறியிருக்கிறார்.
அவருடைய வாக்குறுதியும் பொய்யாக அமையாது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தொடர்ந்தும் அவதானிப்புடன் இருப்போம். மக்களுக்கு உண்மை நிலை என்ன என்பதை விரைவில் வெளியிடுவோம். எங்களது இந்த பிடியில் இருந்து யாரும் தப்பி விட முடியாது என்றும் தெரிவித்தார்.
வீடியோ----->
வீடியோ----->
.jpg)