மதம் மாறிய பின் பெயரை மாற்றாதது ஏன்!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும், தமிழ் பட உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவருமான யுவன்சங்கர்ராஜா ஏற்கனவே 2 திருமணங்கள் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர்.

அதன்பிறகு அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறி, கீழக்கரையை சேர்ந்த ஜெபரூனிசா என்ற பெண்ணை 3-வது திருமணம் செய்துகொண்டார்.

3-வது திருமணத்துக்கு பின் ஊடகங்களை சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் அவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு யுவன்சங்கர்ராஜா அளித்த பதில்களும் வருமாறு:-


கேள்வி:- நீங்கள் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகும் பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்?

பதில்:- நான் சினிமாவுக்கு வரும்போதே யுவன்சங்கர்ராஜா என்ற பெயரில்தான் அறிமுகம் ஆனேன். அந்த பெயர்தான் ரசிகர்களுக்கு பரீட்சயமானது. புதிதாக பெயர் சூட்டிக்கொண்டால் அந்த பெயரை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? என்பது சந்தேகம் தான். அதனால் தான் பெயரை மாற்றவில்லை.

கேள்வி:- உங்களுடைய 3-வது திருமணத்தில் உங்களின் தந்தை இளையராஜா கலந்து கொள்ளவில்லையே? உங்களின் திருமணத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா? அல்லது எதிர்ப்பு தெரிவித்தாரா?

பதில்:- எதிர்க்கவில்லை. ஊடகங்கள் குறிப்பிட்டப்படி, அது ரகசிய திருமணம் அல்ல. என் குடும்பத்தினர் அனைவருக்கும் முன்பே தெரியும். அப்பாவிடம் தெரிவித்த போது உனக்கு எது சந்தோஷமோ அதை செய் என்று அனுமதி கொடுத்தார். என் குடும்பத்தினர் அனைவரும் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

பெண் வீட்டாருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டதால் உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அப்பாவை சந்தித்து திருமணத்துக்கு அழைத்தபோது, எப்போது திருமணம்? என்று கேட்டார். 2 நாளில் திருமணத்தை நடத்தவேண்டிய சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கினேன்.

நேரம் கிடைக்காத காரணத்தால் அப்பா என் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. திருமணத்தை முடித்த மறுநாளே அப்பாவிடம் சென்று, ஆசி பெற்றேன். 

இவ்வாறு யுவன்சங்கர்ராஜா கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -