கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 6 மாதங்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடம் ஒன்றை மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா, திருப்பி கொடுக்காது பலவந்தமாக வைத்திருப்பதாக தெரியவருகிறது.
கொலன்னாவ வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றையே ஹிருணிகா பிரேமச்சந்திர தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலவந்தமாக கைப்பற்றி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் ரொஹான் விக்ரம என்ற நபருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அவர், ஹிருணிகாவின் தாயாரது கோரிக்கைக்கு அமைய பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அதனை வழங்கியிருந்தார்.
2011 ஆம் ஆண்டு பிரேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அந்த கட்டிடத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் பலவந்தமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
