வெள்ளைவான் கொலைகாரர்கள் விசாரணைகளை குழப்புவதற்கு பொலிஸ் மா அதிபர் முயற்சி!

வெள்ளைவான் கொலைகாரர்கள் குறித்த விசாரணைகளை குழப்புவதற்கு தற்போதைய பொலிஸ்- மா- அதிபர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கடற்படையை சேர்ந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளைவான் படுகொலை குறித்து குற்றப்புலானாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது முன்னாள் பாதுகாப்புசெயலாளர், முன்னாள் கடற்படை தளபதி, ஆகியோரிற்கு இதில் உள்ள தொடர்புகள் குறித்த பல தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் பொலிஸ்- மா- அதிபர் இந்த விசாரணைகளை குழப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெள்ளைவான் குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ரவிசெனிவரத்தின திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரின் இடத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இந்த குற்றங்களை மறைக்க உதவிய மகேஸ்பெரேராவை நியமிப்பதற்கு பொலிஸ்-மா- அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராஜபக்ச விசுவாசியான பொலிஸ்மா அதிபர் இலங்ககூனே குற்ற விசாரணைகளில் மிகச்சிறந்த அனுபவமுள்ள திறமையான அதிகாரி என கருதப்படும் ரணவீர என்பவரை குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குநர் பிரிவிலிருந்து இடம் மாற்றிவிட்டு எவ்வித அனுபவமுமற்ற நகஸ்முல்ல என்பவரை நியமித்தவர்.இந்த நடவடிக்கையை ரவிசெனிவிரத்தினவும் கடுமையாக எதிர்த்ததால அவரும் இடமாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜாதிஹ ஹெல உறுமய ஆகிய தரப்பினர் கொடுத்துவரும் அழுத்தங்கள் காரணமாவே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு செயற்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன. 

வெள்ளை வான் கொலைகாரர்கள் மறைந்திருப்பதற்கு ஜாதிஹ ஹெல உறுமய தனது பௌத்த ஆலயமொன்றினை வழங்கியிருந்தது, தற்போது விசாரணைகள் மூலம் இது வெளியாகலாம் என அக்கட்சி அஞ்சுகின்றது இதனால் விசாரணைகளை குழப்ப அது முயல்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
globletamil
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -