இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் புதிய மாற்றத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது மேதினக் கூட்டமானது ஐக்கிய தேசியக்கட்சியின் வரலாற்றில் என்றும் இல்லாதாவாறு மறைந்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் ஆர்.பிரேமாதாச ஆகியோர்களின் மேதின கூட்டத்தையும் மிஞ்சும் வகையில் இம்முறை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மத்திய கொழும்பில் இருந்து வரலாறு படைக்கும் என தெரிவிக்கின்றார்
மைத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான பைரூஸ் ஹாஜி.
மேலும் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பைரூஸ் ஹாஜி;
மேதினக் கூட்ட்டம் நெருங்கி வருகின்ற வேலையில் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்த நாளுக்காக நான் விளம்பரப்படுத்திய எனது சிறிய புகைப்படத்துடனான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதுக்கடையில் தொங்கவிடப்பட்டிருந்த விளம்பரப்பலகையினை நேற்று இரவு சிலர் போதையில் வந்து முற்றாக சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
இது அரசியலில் வெட்கித்து தலை குணியும் செயல் மட்டுமல்லாமல் முழு மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களையும் அவமதிக்கும் செயல் என பைரூஸ் ஹாஜி தெரிவிக்கின்றார்.
இது அரசியலில் வெட்கித்து தலை குணியும் செயல் மட்டுமல்லாமல் முழு மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களையும் அவமதிக்கும் செயல் என பைரூஸ் ஹாஜி தெரிவிக்கின்றார்.
இதேவேளை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பற்றியும் மேதினம் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்களும் எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
%2Bcopy.jpg)