பைரூஸ் ஹாஜியின் மேதின ஏற்பாடும் அவருடைய விளம்பரப்பலகை உடைப்பும் -வீடியோ

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

லங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் புதிய மாற்றத்தின்  அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் பங்களிப்புடன்  உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது மேதினக்  கூட்டமானது ஐக்கிய தேசியக்கட்சியின் வரலாற்றில் என்றும்  இல்லாதாவாறு மறைந்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும்  ஆர்.பிரேமாதாச ஆகியோர்களின் மேதின கூட்டத்தையும் மிஞ்சும்  வகையில் இம்முறை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்  மத்திய கொழும்பில் இருந்து வரலாறு படைக்கும் என தெரிவிக்கின்றார் 

மைத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான பைரூஸ் ஹாஜி.

மேலும் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பைரூஸ் ஹாஜி;

மேதினக் கூட்ட்டம் நெருங்கி வருகின்ற வேலையில் எமது கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்த நாளுக்காக நான்  விளம்பரப்படுத்திய எனது சிறிய புகைப்படத்துடனான பிரதமர் ரணில்  விக்ரமசிங்கவின் புதுக்கடையில் தொங்கவிடப்பட்டிருந்த  விளம்பரப்பலகையினை நேற்று இரவு சிலர் போதையில் வந்து முற்றாக சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.

இது அரசியலில் வெட்கித்து தலை குணியும் செயல் மட்டுமல்லாமல் முழு மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களையும் அவமதிக்கும் செயல் என பைரூஸ் ஹாஜி தெரிவிக்கின்றார்.

இதேவேளை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பற்றியும் மேதினம் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்களும் எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -