தோப்பூர் பொது விளையாட்டு மைதானம் செப்பனிடும் வேலைத்திட்டம்!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் பொது விளையாட்டு மைதானம் செப்பனிடும் வேலைத்திட்டத்தினை உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.எம்.சனூஸ் (18) நேற்று ஆரம்பித்து வைத்தார்.

தோப்பூர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவரும் போக்குவரத்து பிரதி அமைச்சரின் இணைப்பாளருமான என்.நாஹூரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், கிண்ணியா நகர சபை உறுப்பின் ஐ.எஸ்.சப்ரின், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.நிஸ்மி, உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பீ.கே.கலீல், தோப்பூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.ஹிசாம் மற்றும் மூதூர் போக்குவரத்து சாலை முகாமையாளர் எஸ்.எம்.நௌபீர் அகியோர் பங்கு பற்றினர்.

தோப்பூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் தோப்பூர் மக்களுக்கான உதவி அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து போக்குவரத்து பிரதி அமைச்சரிடம் கொடுத்த வேண்டுகோளை ஏற்று விளையாட்டு மைதானத்தினை அமைத்துத்தர முன் வந்தார்.

தோப்பூர் பிரதேசத்தில் 22 கடிணப்பந்து விளையாட்டு கழகங்கள் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஆனால் பொருத்தமான விளையாட்டு மைதானம் இல்லாமல் அவதியுறுகின்றனர். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை பாடசாலை மாணவர்களும் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தவும் பயிற்சிகளில் ஈடுபடவும் மைதானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். பிரதி அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் மைதானம் அமைக்க தேர்ந்தெடுத்த காணியிலுள்ள காடுகளை அகற்றவும், புனரமைப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக விளையாட்டு மைதானமின்றி மிகவும் கஷ்டப்பட்ட இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பாடசாலை மாணவர்கள் இதன் மூலம் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -