இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களை கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்வதற்கு சம்மதம்!

இக்பால் அலி-
குருநகல் நகரிலுள்ள பாடசாலைகளில் பெண்களுக்கான முஸ்லிம் பாடசாலை ஒன்றை உருவாக்குவதற்கும் மற்றும் இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களை கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்வதற்கும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சம்மதம் தெரிவித்துள்ளதாக குருநாகல் நகர் ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஜே.எம்.இம்ரான் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் முக்கிய பிரமுகர்கள் கல்வி அமைச்சரின் விசேட அழைப்பை ஏற்று அவரது இல்லத்தில் சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை 26-04-04 நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது எம்மால் குருநாகல் நகரில் பெண்ளுக்கான ஒரு பாடசாலையும் இலங்கையிலுள்ள அனைத்து மத்ரஸாக்களையும் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்து தர வேண்டும் என இரு கோரிக்கைகள் குருநால் மாவட்ட உலமா சபையால் முன்வைக்கப்பட்டது. 

இந்த இரு கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்து அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உறுதியுடன் வெளியிட்ட கருத்தினையே அஷ்ஷெய்க் ஜே.எம்.இம்ரான் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; 

குருநாகல் நகரில் ஒரு பெண் பாடசாலை இல்லை என்பது தனக்கு தெரிந்த விடயமாகும். அது மட்மல்ல ஆண்கள் வேறு பெண்கள் வேறு என தனிப்பிரிவுகளாக முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்பதையே இஸ்லாமியக் கவ்வி முறையுள்ளது. இந்தக் குறைய நிவர்த்தி செய்வதற்கு குருநாகல் நகரில் ஒரு பெண் பாடசாலை உருவாக்குவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுப்பேன் எனவும் தெரிவித்த அமைச்சர் இலங்கையிலுள்ள அனைத்து அரபு மத்தராஸாக்களையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்காக ஒரு இணைப்பதிகாரியை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் எமது இருகோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்து கருத்து வெளிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஹபீழ் மற்றும் உப செயலாளர் ரிஸ்மி காசிமி ஹொரம்பாவ ஜம்மியதுல் உலமாவின் ஜரூக் மற்று அஷ்ஷெய்க் சாஜஹான உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமாவின் சமூக சேவை மற்றும் பிரச்சாரப் பணிக்கான பொறுப்பாளர் அமைச்சருக்கு சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தர்ஜுமதுல் குர்ஆன் பிரதியொன்ரை வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -