இன்று கட்டாரில் வரலாறு கண்டிராத அளவுக்கு புழுதிக்காற்று வீசியுள்ளது.
நேற்று மதியம் தொட்டு சவுதி அரேபியாவில் ஆரம்பித்த புழுதிக்காற்று, இரவோடு இரவாக கட்டாரையும் தாக்கியுள்ளது. கட்டார் முழுக்க இருள் சூழ்ந்த வண்ணம் காணப்படுகிறது.
இதன் காரணமாக, மக்களின் போக்குவரத்து பாதிக்கப் பட்டிருக்கும், இதே வேளை,பல பாடசாலைகளும் பல்கலைக் கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
இன்று வெளி வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்துள்ளார்கள்.அவர்கள் மதிய உணவு உண்ண முடியுமா? என்ற கேள்விக்குறியோடு பணிக்குச் சென்றுள்ளார்கள்.


