ஜுனைட்.எம்.பஹ்த்-
உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளில் தேநீர், அப்பம் முதல் உணவு வகைகளின் குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் தெளிவாக ஒட்டப்படாது முறைகேடு இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியுள்ள நுகர்வோர் அதிகார சபை, நடைமுறையைப் பின்பற்றத் தவறினால் அரசாங்கமே சுற்று நிருபம் மூலம் விலைகளைப் பகிரங்கப்படுத்த நேரிடும் என தெரிவித்துள்ளது.
புதிய ஆட்சியில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதும் நுகர்வோர் அதன் பயனைப் பெறுவதில் தொடர்ந்து தடையிருந்து வருவதாக நுகர்வோர் அதிகார சபை பிரதானி ரூமி மர்சூக் சுட்டிக்காட்டியுள்ளார்.
