சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது கிறுக்கியிருந்தார்.
இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசிய அகழ்வாராய்ச்சி பொருட்களை பாதுகாக்கும் அதே நேரம் அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறை உணர வேண்டும் என்று ஏற்கனவே வெளியுறவுத்துறையின் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தமது மகளின் அறியாமையை உணர்ந்து அவளை மன்னிக்குமாறு உதயசிறியின் 74 வயது தாயும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

