கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு!

எம்.ரீ.எம் பர்ஹான்-

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுக்கு ஏனைய பிரிவு மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் வருட மாணவர்களது கல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுகின்றமையும் அது குறித்து நிர்வாகிகள் எவரும் பொறுப்புடன் நடந்துகொள்வதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

'இது பல்கலைக்கழகமா? பள்ளிக்கூடமா', 'எங்கே?எங்கே?சுற்றுலாக்கான நிதி எங்கே', 'போராட்டம் இது போராட்டம் எமது உரிமைக்கான போராட்டம்';, 'யாருக்கு யாருக்கு இராஜதுரை அரங்கு யாருக்கு' போன்ற சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியமும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -