பெரியமடு மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேச செயலக எல்லைப் பிரிவிற்குள் அமைந்திருக்கின்ற ஒரு முஸ்லிம் கிராமம், 1956களில் விவசாயக் குடியிருப்புகளை நிறுவுகின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் சுமார் 280 குடும்பங்கள் மன்னார் விடத்தல்தீவு பகுதியிலிருந்து குறித்த பிரதேசத்தில் குடியேற்றப்பட்டார்கள், 1990களில் ஏற்பட்ட பலவந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து குறித்த கிராமம் பெரியளவில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது, என்பதை குறித்த கிராமங்களைச் சேர்ந்த கிராமிய அபிவிருத்தி சங்கங்களைச் சந்தித்தபோது தெரிந்துகொண்டேன் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தன்னுடைய ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெரியமடு கிராமிய அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பு கடந்த 18.04.2015 அன்று விடத்தல்தீவு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது, இதன்போது அங்கு வருகை தந்திருந்த பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காயாநகர், விடத்தல்தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், தமது கிராமங்களில் நிலவும் குறைபாடுகள் குறித்து கலந்துரையாடினார்கள்.
பெரியமடு குளம், சன்னார் குளம் ஆகிய இரண்டு குளங்களையும் அண்மித்து இராணுவமுகாம்கள் அமைக்கபட்டுள்ளதால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்கின்றது, அது மாத்திரமன்றி பெரியமடுவில் இருந்து மன்னாருக்கும் மடுவுக்கும் அல்லது காக்கையன்குளம் ஊடாக வவுனியாவுக்குமான பாதைகள் சீரமைக்கப்படாமையால் எல்லா வகையிலும் குறித்த கிராமம் பின்னடைவை எதிர்நோக்க்கியிருக்கின்றது, பாடசாலையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் மீளக்குடியேற்றத்தில் குறைபாடுகள் தொடர்ந்தும் நிலவுவதால் சீரான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதிருக்கின்றது, அதைவிட எமது பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற எல்லாவிதமான நிவாரண உதவிகளின்போதும் அரசியல் பேதங்கள் பார்க்கப்படுகின்றன, இதனால் தேவையுடைவனைவிடவும் அரசியல் சார்புள்ளவர்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன, இவ்வாறாக நாம் பல்வேறு சிக்கல்களை நாளாந்தம் எதிர்நோக்குகின்றோம் என கிராமிய அபிவிருத்தி சங்கப்பிரதிநிதிகள் எம்மிடம் முறையிட்டிருக்கின்றார்கள்.
மேற்படி விடயங்கள் குறித்து உரிய கவனம் எடுக்கப்படும், அத்தோடு காணி தொடர்பான பல பிரச்சினைகளும் காணப்படுகின்றன, இவற்றையும் மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்டவகையில் தீர்க்க முடியுமானவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். முதற்கட்டமாக மாந்தை மேற்கு பிரதேச செயலக மட்டத்தில் மீள்குடியேறுகின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கும், மீள்குடியேற்றத்தை திட்டமிடுவதற்குமான விஷேட அமர்வொன்றினை நடாத்துவது சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
அத்தோடு பெரியமடு மக்கள் தொடர்பிலான கவனயீர்ப்பு பிரேரணையொன்றினை எதிவரும் மாகாணசபை அமர்வில் கொண்டுவருவதற்கும் குறித்த விடயங்களோடு தொடர்புடைய அதிகாரிகளின் கவனத்திற்கு இம்மக்களின் பிரச்சினைகளை முன்கொண்டுசொல்வத்ற்க்கும் தீர்மானித்திருக்க்கின்றேன்.
.jpg)
.jpg)