நூறுநாள் வேலைத் திட்டத்தில் திவிநெகும பயனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் திவிநெகும பயனாளிகளுக்கான கொடுப்பனவு இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.

இந்த அதிகரித்த கொடுப்னவு ஒருவர் அல்லது இருவரைக் கொண்ட குடும்பத்திற்கு 2250 ரூபாவும், மூன்று பேரைக் கொண்ட குடும்பத்திற்கு 3600 ரூபாவும், நான்கு பேர் அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 4500 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாகவும் திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கொடுப்பனவுகளில் 2250 ரூபா பெறுபவர்கள் கட்டாயச் சேமிப்பாக 100 ரூபாவும், சமூகப்பாதுகாப்பு நிதியாக 75 ரூபாவும், வீட்டு சீட்டிலுப்பிற்கு 10 ரூபாவும் செலுத்த வேண்டும் மிகுதியாவுள்ள 2065 ரூபாவை திவிநெகும சமுதாய அபிவிருத்தி வங்கியில் பணமாக பெற்றுக் கொள்ள முடியும். 

இதே போன்று 3600 ரூபா பெறுபவர்கள் கட்டாயச் சேமிப்பாக 200 ரூபாவும், சமூகப்பாதுகாப்பு நிதியாக 75 ரூபாவும், வீட்டு சீட்டிலுப்பிற்கு 10 ரூபாவும் செலுத்த வேண்டும். மிகுதியாகவுள்ள 3315 ரூபாவை திவிநெகும சமுதாய அபிவிருத்தி வங்கியில் பணமாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் 4500 ரூபாவை பெறுபவர்கள் கட்டாயச் சேமிப்பாக 300 ரூபாவும், சமூகப்பாதுகாப்பு நிதியாக 75 ரூபாவும், வீட்டு சீட்டிலுப்பிற்கு 10 ரூபாவும் செலுத்த வேண்டும். மிகுதியாகவுள்ள 4115 ரூபாவை திவிநெகும சமுதாய அபிவிருத்தி வங்கியில் பணமாக பெற்றுக் கொள்ள முடியும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -