கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளராக எஸ்.எல்.முனாஸ் நியமனம்!

அபு அலா -
கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட ஊடக சம்மேளன உதவிச் செயலாளருமான எஸ்.எல்.முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (08) முதலமைச்சர் காரியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பொத்துவில் பிரதேச சபை உதவித் தவிசாளரும் சுகாதார இராஜாங்க அமைச்சர் என்.ரீ.ஹஸன் அலியின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எல்.தாஜூன், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே.பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -