பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்!

மிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் இந்தியாவில் இலக்கியத்துக்கான அதியுயர் விருதான ஞானபீட விருதைப் பெற்றவருமான ஜெயகாந்தன் நேற்று இரவு (08) சென்னையில் காலமானார். 

அவருக்கு வயது 81. கடலூரில் 1934 ஆண்டு பிறந்த அவருக்கு சிறு வயதிலிருந்து பாரதியாரின் படைப்புகள் மற்றும் இடதுசாரி சித்தாந்தங்கள் மீது அதிக ஆர்வம் இருந்தது. 

பாடசாலை படிப்புக்கு பிறகு சென்னை வந்த அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிறிய வேலைகளைச் செய்யும் பணியில் சேர்ந்தார். அச்சமயத்தில் அவருக்கு ஜீவா போன்ற மூத்த இடதுசாரி தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 

இதன் காரணமாக அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது படைப்புகளில் இடதுசாரி சிந்தனைகள் தெரிய ஆரம்பித்தன. ஆழமான சமூக சிந்தனைகள், பாட்டாளி மக்களின் பிரச்சினைகள் ஆகியவற்றை கருவாகக் கொண்டு பல படைப்புகளை ஜெயகாந்தன் படைத்துள்ளார். 

ஆரம்ப காலங்களில் இடதுசாரி சிந்தனைகளின் ஆளுமைக்கு உள்ளான ஜெயகாந்தன் பின்னாளில் கம்யூனிஸக் கட்சிகளின் கொள்கைகளிலிருந்து முரண்படவும் செய்தார். 

அவர் எழுதிய 'கருங்காலி' எனும் சிறுகதையில் அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதிருந்த அதிருப்தி வெளிப்படும் என்று இலக்கிய ஆய்வாளர்கள் கூறுவார்கள். 

கம்யூனிஸ சித்தாந்தங்களில் இருந்து விலகிய அவர் அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியையும் சில காலம் ஆதரித்து, அக்கட்சியின் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். 

அவர் ஏராளமான சிறுகதைகளும் நாற்பது புதினங்களையும் எழுதியுள்ளார். அவரது பல படைப்புகள் திரைப்படங்களாவும் வெளியாயின. 

இந்தியாவில் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான ஞானபீட விருது 2002 ஆம் ஆண்டுக்காக அவருக்கு வழங்கப்பட்டது. 

சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப் போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர் போன்ற அவரது படைப்புகள் மிகவும் பிரபலமானவை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -