இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி பாரூக் சாஹிப் நியமனம்!

ம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் சட்டத்துறை ஆலோசகராக (06/05/15) சட்டத்தரணி பாரூக் சாஹிப் நியமனம்.

இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி பாறூக் சாஹிப் அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக அரச சேவையில் இணைந்து விஞ்ஞான மாணி பட்டப்படிப்பின் பின் தொழில் வான்மையிலான உளவளத்துறை டிப்ளோமா மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப்பணிக்கான டிப்ளோமா மற்றும் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரியின் வருகைதரும் விரிவுரையாளராகவும் அத்தோடு நின்று விடாமல் ஓர் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியாகவும் பிரசித்த நொத்தாரிசாகவும் சத்தியப்பிரமான ஆணையாளராகவும் செயற்படுகின்றார்.

அத்துடன், இறக்காமம் பட்டினப்பள்ளிவாசல் நிறுவாகத்தின் பொருளாளராகவும் FFCR நிறுவனத்தின் கெளரவ தலைவராகவும் இறக்காமம் அல்- அஷ்ரப் மத்திய கல்லூரியின் அபிவிருத்தி சங்க உறுப்பினராகவும், பிரதேச விளையாட்டுக்கழக, இளைஞர் கழக சமூக சேவைகள் அமைப்புக்களின் பிரதம செயற்பாட்டாளராகவும் சமூகப்பணிகள் புரிந்து வருகிறார். 

சட்டத்தரணி பாரூக் சாஹிப் இறக்காமம் மண்ணின் பல்துறை ஆளுமை பொருந்திய ஓர் செயற்பாட்டு திறனுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது நியமனத்திற்காக எமது இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சபை முடிவெடுக்கக் காரணம் ஊடகத்துறையில் இவர் கொண்டிருந்த அக்கறையும், வளர்ந்துவரும் ஓர் சிறந்த துடிப்புடன் கூடிய செயற்திறன் உள்ள சட்டத்தரணி என்பதும் பிரதான காரணமாகும். 

இவருக்கான சம்பிரதாய பூர்வமாக எமது இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் சார்பில் அவரது இல்லத்திற்கு சென்று இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் சீருடையை இம்போட் வானொலியின் கட்டுப்பாட்டாளரும் அறிவிப்பாளருமான எஸ்.என்.எஸ்.றிஸ்லியும் அவருக்கான தொப்பியை அறிவிப்பாளர் எம்.ஐ.நெளஷாதும் வழங்கி வைத்தனர்.

மேலும் சட்டத்துறை ஆலோசகருக்கான அடையாள அட்டையினை வலையமைப்பின் நிருவாகப்பணிப்பாளர் தேசமானிய ஜலீல் வழங்கி வைத்தார். 

இதன் போது இணையத்தள செய்தியாசிரியர் எம்.பி.ஷப்னி அஹமட் மற்றும் இறக்காமத்திற்கான பிராந்திய செய்தியாளர் எஸ்.எம். சன்சீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -