இங்கிலாந்து வீரரின் ஒரு நாள் சாதனை!

ருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடிப்பதென்பது சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த காலம் மாறி இன்று 200 அடிப்பது இலகுவான காரியமாகிவிட்டது.

இந்நிலையில் இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களை வெறும் 137 பந்துகளில் அடித்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

நேற்றைய தினம் நன்ட்விச் மற்றும் கல்டி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கழக மட்டத்திலான பொட்டியின் போதே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இவரது 350 ஓட்டங்களில் 34 நான்கு ஓட்டங்களும் 27 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

இப்போட்டியில் நன்ட்விச் அணி 45 ஓவர்களில் 579 ஓட்டங்களைப் பதிவு செய்து தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்டி அணி வெறுமனே 79 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் 500 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -