முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்துக்கு எதையுமே செய்யமாட்டார்கள்!

”மட்டக்களப்பு முஸ்லிம்களின் காணி பிரச்சினைகளை தீர்க்கும் படி முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளர் கிழக்கு மாகாண ஆளுனரிடம் மகஜர் கொடுத்துள்ளமை அக்கட்சித் தலைமையின் கையாலாகா தனத்தை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது” என உலமா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மௌலவி முஸம்மில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மஹிந்த ராஜபக்ஸவின் 10 வருட ஆட்சிக்காலத்தில் சுமார் 8 வருடங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இதன் போது கட்சியின் உயர் மட்டங்கள் தமக்கான பதவிகளை பெற்று சொகுசாக வாழ்ந்தனரே தவிர முஸ்லிம்கள் எந்தப்பிரச்சனையையும் கவனத்தில் எடுக்கவில்லை. இதற்கு மஹிந்தவை காரணம் காட்டி சமூகத்தை ஏமாற்றினார்கள். இப்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆட்சி நல்லாட்சி என உறுதிப்பத்திரத்தை மு. காவின் அமைச்சர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் முபீன் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்க்கும் படி கிழக்கு மாகாண ஆளுனரை மகஜர் மூலம் கேட்டுள்ளார்.

நாட்டின் நகர அபிவிருத்தி அமைச்சு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் கையில் உள்ளது. காணி மீட்பு திணைக்களத்தின் பணிப்பாளராக முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான மௌலவி ஒருவர் இருக்கிறார். கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் இருக்கிறார். இப்படியெல்லாம் இருந்தும் ஆளுனரிடம் மகஜர் கொடுப்பதாயின் கிழக்கில் ஆளுனர் ஆட்சி நடக்கிறதா? அல்லது கடந்த காலத்தில் ஆளுனர் தடைகள் பல போட்டது போல் நல்லாட்சியால் நியமிக்கப்பட்ட ஆளுனரும் தான்தோன்றித்தனமாக நடக்கிறாரா? அல்லது தமது கட்சித்தலைமை கையாலாகாத தலைமை என்பதை உணர்ந்து ஆளுனரிடம் வேண்டியுள்ளாரா? என்ற கேள்விகள் எழுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த வரை எந்த அமைச்சை கொடுத்தாலும் அவர்கள் சமூகத்துக்கு எதையுமே செய்யமாட்டார்கள் என்பதை உலமா கட்சி ஆணித்தரமாக சொல்லி வருகிறது. இதனை மெய்ப்பிப்பதாகவே அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரின் இந்தச் செயல் காட்டுகிறது. எதையும் செய்யாமல் இருந்து விட்டு அடுத்த தேர்தல் வரும் போது ஆணையை தாருங்கள் பூனையை தாருங்கள் என மக்களை ஏமாற்றுவது முஸ்லிம் காங்கிரசின் வரலாறாக உள்ளது. அதையே இத்தனை சக்தி வாய்ந்த அமைச்சு இருந்தும் இவர்களால் முஸ்லிம்களின் ஒரு ஏக்கர் காணியையும் மீட்க முடியவில்லை என்பதன் மூலம் தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -