அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான திட்டமிட்ட சதி முயற்சிகள்!

கே.சி.எம்.அஸ்ஹர்-
ன்னி மாவட்ட முஸ்லிம்கள் மிகவும் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். வன்னி முஸ்லிம் அரசியல் வரலாற்றில் பெரும் சாதனைகளைப் புரிந்த ஒருவராகவே அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் நோக்கப்படுகிறார். வன்னி முஸ்லிம் மக்களின் உள்ளங்களையும் தாண்டி இலங்கை முஸ்லிம்கள் அனைவரினதும் உள்ளங்களிலும் பெரும் இடத்தைப்பிடித்துக் கொண்டுள்ளார். அது மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் இவர் பிரபலமடைந்துவருகிறார்.

வன்னி முஸ்லிம்களுக்கு தேவையான விடயங்களை ஆபத்பாந்தவனாக செயற்பட்டு நிறைவு செய்து வருகிறார். அரசியல் தலைவராக இருப்பவருக்கு மனோதைரியமும், சாணக்கியமும் இருக்க வேண்டும். இது அமைச்சரிடம் நிறையவே உள்ளது.அமைச்சரின் முன்னேற்றத்தைக் கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ள தமிழ் இனவாதக் குழுக்களும் ,பேரினவாத இனக்குழுக்களும் ,முஸ்லிம் புல்லுருவிகள் சிலரும் அமைச்சருக்கெதிராக பல வகைச் சதிகளில் ஈடுபட்டுவருவதைக் காணமுடிகிறது.

பொதுபலசேனா அமைச்சரை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.எவ்வித அடிப்படையையும் இன்றி பொய்களை புனைவதும் புழுகுகளை விடுவதும் தொழிலாகி உள்ளது. மன்னாரை பிறப்பிடமாக கொண்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட காதிர்கான்(கொய்தர் கான்)என்பவரும் தான் யார்? எண்பதுகளில் மன்னாரில் தான் செய்தது என்ன? ஏன் கொழும்புக்குத் தப்பி ஓடினேன்? என்னை மக்கள் ஏன் நிராகரித்தார்கள்? என்பதை எல்லாம் சற்று யோசித்துப் பார்க்காமல் அமைச்சருக்கு எதிராக மிக மோசமான போலிக்குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.அமைச்சரையும் அவரின் பொருளாதார வசதிகளையும் பற்றி விமர்சிக்கும் தராதரம் இவருக்குள்ளதா?

ஜமாஅத் பணிகளில் அதிகம் ஈடுபடுபவரே இவரின் தந்தை பதியுதின் அவர்கள் என்பதை நாம் அறிவோம் .சிறந்த தாய் தந்தையரின் மகன் தான் அமைச்சர் றிசாத் பதியுதின் இவரை அநியாயமாக விமர்சிப்பதால் வரும் பாவத்தை நீங்களே அனுபவியுங்கள்.

கொய்தர்கானின் முறைப்பாட்டை பலசேனா பாராட்டியுள்ளது எனின் இவருக்கும் பலசேனாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை முஸ்லிம் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.சிங்கள ஜாதிக பெரமுனே என்ற ஒரு குழு அமைச்சருக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை புதிதாகப் பதிவு செய்துள்ளது.அதன் விபரமாவது;

 அமைச்சர் வில்பத்துக் காணியை கைப்பற்றியுள்ளார்.
 வெளிமாவட்ட வெளிநாட்டு மக்களை குடியேற்றம் செய்ய முயல்கிறார்.
 வெளிநாட்டு பணவுதவி கிடைத்தள்ளது.
அமைச்சர் வில்பத்துக் காணிகளை கைப்பற்ற வில்லையென முசலிப்பிரதேச செயலக அறிக்கை குறிப்பிடுகின்றது.

வில்பத்துப்படத்தை பரிசீலனை செய்யுங்கள் நிலைமை புரியும். 25 வருட வெளியேற்றத்தால் பூர்வீகக் காணிகள் வில்பத்துக் காட்டுடன் இணைந்து காட்சி தருகின்றது.படையினர் பிடித்து வைத்துள்ள மக்களின் காணிகளை உடன் விடுவிக்க வேண்டும்.தனக்காக ஒரு அங்குல நிலக் காணிகளையும் அமைச்சர் அடாத்தாக பிடிக்கவில்லை பலவந்தமாக புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியேற்றவே அமைச்சர் முயற்சி செய்கிறார். யாவும் சட்டரீதியாகவே நடைபெறுகிறது.

உள்நாட்டு வெளிநாட்டு மக்களைக் குடியேற்ற அமைச்சர் முயல்கிறார் என்பது முழுப் பொய்யாகும். இப்பிரதேசம் ஒரு வரண்ட பிரதேசமாகும். இலங்கையில் மழைவீழ்ச்சி மிகக்குறைந்த பிரதேசமும் இப்பிரதேசமே. இங்கு குடியேற இப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மட்டுமே விரும்புவர்.வெளிமாவட்த்தாரோ,வெளிநாட்டினரோ இங்கு குடியேற ஒரு போதும் விரும்பமாட்டார்கள். இதுதான் யதார்த்தம் இதிலேதும் சந்தேகமிருப்பின் முசலிப் பிரதேச செயலாளருடன் தொடர்பு கொள்ளவும்.

90இல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றவேண்டிய பொறுப்பு அரசுக்கே உள்ளது. அரச இயந்திரம் இவ்விடயத்தில் மெதுவாக செயற்படின் துரிதமாக முஸ்லிம்களைக் குடியேற்ற முஸ்லிம் நாடுகளிடமிருந்து நிதி பெறுவது எவ்வகையில் குற்றமாகும்.இது தவறு என்றால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் உலக நாடுகள் வீடுகள் கட்டிக் கொடுத்தது தவறில்லையா? உங்கள் பாசையில். தவறாகத்தானே நுரைச்சோலை வீடுகளை இன்னும் தடுத்துள்ளீர்கள்.

ஆகவே.இவ்விடயத்தில் மேதகு சனாதிபதியும்,பிரதமரும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து இம்மக்களை மீளக்குடியேற்ற அமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி புரியுமாறு இம்மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

வடபுல முஸ்லிம்கள் புல்லுருவிகளின் மாய வலையில் சிக்கி வன்னி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்கும் சதித்திட்டத்திற்கு தவறிக்கூட உதவிவிடக் கூடாது.உங்களிடம் புதிது புதிதாக அரசியல் படம் காட்ட வருபவர்களிடம் வன்னி முஸ்லிம்கட்கு நீங்கள் என்ன செய்துள்ளீர் என்று உரத்துக் கேளுங்கள்.விடையை அவர்கள் தரட்டும் பார்ப்போம்.

இத ரணில் மைத்திரியுகம் .இவ்யுகத்தில் இனவாதிகளுக்கு இடமில்லை. இனவாதிகளுக்கு இடம் கொடுத்தோர் தம் இருப்பையே இழந்து விடுவிட்டனர்.இது ஒரு வரலாற்றுப் பாடமாகப் பதியப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -