த.நவோஜ்,ந.குகதர்சன்-
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நாடளாவிய ரீதியில் வீடற்றவர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளை அமைக்கும் 'சமட்ட செவன' நிகழ்ச்சித் திட்டத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு சனிக்கிழமை ஓட்டமாவடியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியிலுள்ள வாகரை, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 318 பயனாளிகளுக்கு வீடமைப்பதற்காக முதற்கட்டமாக இருபதாயிரம் ரூபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு பயனாளிக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் 318 பயனாளிகளுக்கும் வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக இருபதாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், மீதித் தொகை கட்டடங் கட்டமாக வழங்கப்படுமென்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல்.பலன்சூரிய, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.கே.முஹைதீன், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டப் பணிப்பாளர்கள், வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)