பந்துல குணவர்த்தன அங்கத்துவத்தில் இருந்து நீக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமக்கு கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

மத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால், அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிங்கப்பூர் பிரஜையை மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்த விடயம் மற்றும் திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தோற்கடித்தமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமது அங்கத்துவம் நீக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயல்பவர்களுக்கு எதிராக திரண்டமைக்காக இடம்பெற்ற ஒரு நடவடிக்கையாகவே இதனைக் கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மேலும் கூறினார்.
news1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -