எம்.வை.அமீர்-
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடன், உள்ளூராட்சி மன்றங்களில், ஆசியான் மன்றத்தின் செயத்திட்டத்துக்கு அமைவாக,கொய்க்கா நிறுவனத்தினால் கொரியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று மாநகரசபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன், உடற்பயிற்சி நிலையம் ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆணையாளர், ஏ.எல்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் அஹமட் சக்கி அதாவுல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து உடற்பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்வுக்கு ஆசியான் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு.ஏ.சுபாகரன் மற்றும் ஆசியான் மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகளான எம்.ஐ.எம்.வலீத், சீ.சசிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)