நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.
காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள மேற்படி விளையாட்டுக் கழக அங்கத்தவரின் இல்லத்தில் கழக உறுப்பினர் LM.சிப்லி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்களான வித்யாகீர்த்தி MM.அமீர் அலி ஆசிரியர், SMM.பஸீர் ஆசிரியர், MYM.சரீப் உட்பட கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் மேற்படி காத்தான்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகத்தில் தற்போது 15 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக உள்ள நிலையில் கடின பந்து கிரிக்கட் விளையாட்டினை அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வேறு இதர அணிகளின் உபகரணங்களின் உதவியுடன் பயிற்சிகள் மேற்கொண்டு விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விளையாட்டுக் கழகத்தினை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடின பந்து கிரிக்கட் விளையாட்டு உபகரணங்களை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் ஆகியோர் கழகத்தின் தலைவரிடத்தில் கையளித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)