தெஹியத்த கண்டிய வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா!

தெஹியத்த கண்டிய வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கௌரவ கலப்பதிகே சந்திரதாச கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன், அம்பாறை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் தலகல ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுகின்ற மக்கள் வாழும்
பிரதேசங்களில் தெஹியத்த கண்டியும் ஒன்றாகும். அது போன்று திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர, கோமரங்கடவல, வான்எல போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறான சிறுநீர் நோயினால் பாதிக்கப்படும் நபர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களைக் குணப்படுத்தும்
மற்றும் அவர்களுக்கு சேவையாற்றும் நோக்கத்திற்காக தேவைப்படும் கட்டிடம் மற்றும் வசதிகளை கிழக்கு மாகாணத்திற்கு என ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டைக் கொண்டு நிறைவேற்ற முடியாததால் கௌரவ அமைச்சர் மன்சூர் அவர்கள் மத்திய சுகாதார அமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க 50 மில்லியன் ரூபா இந்த விடுதி நிர்மாணிப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், குறித்த வைபவத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய
உபகரணங்கள் கௌரவ அமைச்சர்களினால் தெஹியத்த கண்டிய ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கௌரவ அமைச்சர் மன்சூர் அவர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது இந்த தெஹியத்த கண்டி ஆதார வைத்தியசாலையானது, அதற்கடுத்ததாக இருக்கின்ற மகஓயா ஆதார வைத்தியசாலையிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்றது. எனவே இந்த வைத்தியசாலையினுடைய சேவைகள் குறித்து கூடிய கவனம் எடுப்பதாகவும் இதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை கௌரவ ராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி அவர்களுடைய உதவியால் மத்திய அரசாங்கத்திலிருந்து பெற முடியும் எனவும், இந்த வைத்தியசாலைக்குத் தேவைப்படுகின்ற விடுதி மற்றும் இன்னோரன்ன வசதிகளை படிபடிப்படியாக பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -