முன்னாள் ஜனாதிபதியை லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கும் விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட்டிருக்கலாம் என பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி போன்ற முக்கியமான நபர்களை லஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கும் போது உறுதிப்படுத்தக் கூடிய சாட்சியங்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தால், அதனை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் வசந்த சேனாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
