நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிரதரமுடன் பேச்சுவார்த்தை!

ஊடகப்பிரிவு-

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் நேற்று (02.04.2015) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஸ்ரீகொத்தாவில் சந்தித்து விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இலங்கையின் புதிய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.

அத்துடன் மிக முக்கிய விடயமாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்துவதாகவும், அதற்கான உரிய நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்வதாகவும் NFGG தலைமைத்துவ சபை உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலின்போது NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மற்றும் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் ஆகியோர் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -