பொலார்ட் பந்து வீசும் போது துடுப்பாட்ட வீரர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவது தொடர்பில் நடுவர்களால் எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் களத்தடுப்பில் புதிய விதமாக காணப்பட்டார்.
வாயில் பிளாஸ்டர் அணிந்த வண்ணம் களத்தடுப்பில் ஈடுபட்டார்.
பின்னராக டிவில்லியர்ஸ் அடித்த பந்தை பிடியெடுத்த போது மற்ற வீர்ர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திய போதும் இவர் வாயில் கையை வைத்த படியே காணப்பட்டார்.
அத்துடன் நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் 11 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 209 ரன்கள் குவித்ததையடுத்து 210 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணி களமிறங்கியது.
ஆட்டத்தின் 3வது ஓவரின் போது பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்கு அருகில் கடமையே கண்ணாக பீல்டிங் செய்து கொண்டிருந்த போலார்டை அழைத்த நடுவர்,
ஸ்லெட்ஜிங்கில் (வாக்கு வாதத்தில்) ஈடுபடக்கூடாதென்று எச்சரிக்கை விடுத்தார். "நாந்தா ஒன்னுமே செய்யலயே..சார்” என்ற போலார்டிடம் "இது வெறும் எச்சரிக்கை.. தான்” என்று சொல்லிவிட்டு நடுவர் போய்விட்டார்.
நடுவரின் இந்த திடீர் எச்சரிக்கையால் கடுப்பான போலார்ட், ஓவர் இடைவேளையின் போது, ஓடிப்போய் ஒரு செல்லோ டேப்பை வாயில் ஒட்டிக்கொண்டு சமத்துப் பிள்ளையாக மைதானத்துக்குள் வந்தார்.
பவுண்டரி லைனில் இருந்த ரிக்கி பாண்டிங் உட்பட மும்பை அணி வீரர்கள் அனைவரும் போலார்டின் இந்த நடவடிக்கையை பார்த்து சிரித்தனர்.
மைதானத்தில் உள்ள பிரம்மாண்டமான திரையிலும் போலார்டின் செல்லோ டேப் ஒட்டிய முகம் தெரியவே, ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் விண்ணை முட்டியது. கடைசியில், அதே திரையில் ’சைலன்ஸ் ப்ளீஸ்’ என்று காட்டிய பிறகுதான் ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் கொஞ்சம் அடங்கியது.
எனினும் இவர் போட்டியின் இறுதி ஓவரை வீசிய போது இவரது வாயில் பிளாஸ்டர் காணப்படவில்லை.



