வெளிநாட்டில் இரகசிய மற்றும் சட்டவிரோத வங்கி கணக்குகள் இல்லை- மஹிந்த

வெளிநாட்டு வங்கிகளில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இரகசிய மற்றும் சட்டவிரோத வங்கி கணக்குகள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிகள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் சேறு பூசும் வகையில், வெளிநாட்டு வங்கிகளில் இரகசிய வங்கி கணக்குகள் இருப்பதாகவும் இவற்றில் பல பில்லியன் கணக்கான பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

இந்த பொய்யான வதந்திகளை ஊடகங்களும் புதுப்பித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

இந்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டுக்களை எனது அரசியல் எதிரிகள் ஆயுதங்களாக பயன்படுத்துவதாக தோன்றுகின்றது.

எனக்கோ அல்லது எனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ வெளிநாட்டு வங்கிகளில் எவ்விதமான இரகசிய கணக்குகளும் இல்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -