புதிய தேர்தல் முறைமையால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
புதிய தேர்தல் முறைமை சிறுபான்மை மக்களுக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து நேற்று (19) பம்பலபிட்டி ஓசென் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், செயலாளர்கள் வருகை தரவில்லை என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார். 

இதன் போது தேர்தல் மாற்றத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்புத் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் தேர்தல் மாற்றம் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதில் ஒட்டு மொத்தமான கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கலந்து கொண்ட கட்சிகள்

மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நவசமாச கட்சி, உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -