ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
திருகோணமலை நகரசபை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியேருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்ட பேரனியும் கொடும்பாவி எரிப்பும் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற தொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு 22.04.2015 இன்று காலை 10 மணியளவில் திருகோணமலை மின் சார நிலைய வீதயில் அமைந்துள்ள நகரசபை வேலைப்பகுதியின் அலுவலகத்தின் முன் இருந்து ஆரம்பமான எதிர்ப்பு பேரணியானது திருஞானசம்மந்தர் வீதி வழியாக சிவன் கோயிலடி ஊடாக உற்துறைமுக வீதியில்; உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் ஆலுவலகத்தின் முன் அடைந்த அங்கு அவர்களுடைய தொழிலாளர்கள் மேலும் பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் நகரசபை தலைவர் க.செல்வராஜா அவர்களுடைய உருவ பொம்மை எரிக்கபட்டு தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
இதன் போது ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த தொழிற்சங்க தலைவர் எஸ்.கண்ணன் அவர்கள் திருகோணமலை நகரம் பெரியது இங்கு சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்ற ஆளனி பற்றாக்குறை என கோரி மாகாணசபையில் பெற்ற தொழிலாளர் நியமனத்தை தனது உறவினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வழங்கி அலுவலகம் மற்றும் நூலகத்திற்கு அலுவலக பணியாளராக கடமை புரிய வைத்திருந்தார் திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா இதன் மூலம் தற்போது கடமையாற்றி வரும் தொழிலாளர்களுக்கு மேலும் பணி சுமை அதிகரிக்கின்றது.
மேலும் 25 வருடங்களுக்கு மேல் தொழிலாளர்களாக கடமையாற்றியவர்களுக்கு வழங்க வேண்டிய மேற்பார்வையாளர் பதவி உயர்வை தமது ஆதரவாளர்களுக்கு தலைவர் தமது அதிகாரத்தை பயன் படுத்தி வழங்கியுள்ளார்.
இவருடைய சகல விடயங்களுக்கும் துணை போகிறார் நகரசபை செயலாளர் ஏ.எல்.எம்.நபீல் எனவே இவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும்மேலும் தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களில் பாராபட்சம் காட்டப்படுகின்றது.
போன்ற பல குற்றச்சாட்டுகளை வைத்து தமக்கு நியாயமான தீர்வு வேண்டும் என கோரி ஆளுனர் அலுவலகத்தின் முன் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
நீண்டகாலமாக தொழிலாளர் நலன் தொடர்பான பல பிரச்சினைகளை நகரசபை மற்றும் கிழக்க மாகாணசபை மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளுக்க தெரியப்படுத்தியும் தீர்க்கமான முடிவுகள் எதுவம் எமக்கு கிடைக்கப்பட வில்லை எனவே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.
இந்த எதிர்ப்ப நடவடிக்கைகளில் வடக்கு கிழக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் சங்கமும் இணைந்து பல பிரதிநிதிகள் கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)