அக்கரைப்பற்று நிஸ்மி-
கடந்த காலங்களில் பொன் விளையும் பூமிகளாகக் கருதப்பட்ட சம்புக்களப்பு, மேட்டுவெளி, பள்ளவெளி, பொரன்வெளி முதலிய கண்டங்கள் தற்போது எதிர்நோக்கும் பாய்ச்சல், வடிச்சல் பிரச்சினைகளையும் மற்றும் முறையான பாதை அமைப்புகளும், அணைக்கட்டுகளுமின்றி அபிவிருத்தி குன்றிக் காணப்படும் இப் பிரதேசத்தின் அபிவிருத்தி செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2015) அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலது கரை திட்ட முகாமையாளர் அலுவலகத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜுனைதீன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதம அதிதியாக இலங்கை காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபன செயற்பாட்டுப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி) அவர்கள் கலந்து கொண்டு பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
நிகழ்வில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சரின் அக்கரைப்பற்று அமைப்பாளர் ஏ.எல்.மர்ஜுன், சம்புக்களப்பு, மேட்டுவெளி, பள்ளவெளி, பொரன்வெளி முதலிய கண்டங்களின் விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் முதலியோர் கலந்து கொண்டனர்.
சம்புக்களப்பு, மேட்டுவெளி, பள்ளவெளி, பொரன்வெளி முதலிய கண்டங்களின் விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் பாய்ச்சல், வடிச்சல் பிரச்சினைகளையும் மற்றும் முறையான பாதை அமைப்பு மற்றும், அணைக்கட்டுகள் அமைத்தல் முதலிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜுனைதீன் தலைமையில் மேற்படி கண்டங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக் குழு செயற்பாட்டுப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி) இவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)