தேசிய காங்கிரஸுக்கான எழுச்சி மிக விரைவில்!

அஸ்மி அப்துல் கபூர்-
க்கள் தலைவர் ஒருவருடைய அவசியம் மக்களால் உணரப்படுகின்ற காலம், அவர் செய்த பணிகளால் முன்னிலைப்படுத்தப்படும் அவ்வாறானதொரு காலம் மிக விரைவில் தோற்றம் பெறும். அவ்வாறான நிலையே தேசிய காங்கிரஸுக்கான எழுச்சிக்கான அனைத்து வழிகளையும் திறந்து வைக்கும்.இவ்வாறு நேற்று கொழும்பில் இடம்பெற்ற இழப்பீட்டு ஆய்வு மையத்தின் 8வது வருட நிறைவு நிகழ்வின் போது அவ்வமைப்பின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் உருப்பினருமான அஸ்மி ஏ கபூர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்; 

மறைந்த மாமனிதர் அஷ்ரபினுடைய அபிவிருத்தி சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்கு பின்னரான காலத்தில் தனித்துவமான சர்வதேச முஸ்லீம் விரோத சதிவலைகளில் வீழ்ந்து விடாமல் அனைத்து சமூகங்களையும் அரவணைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிராக உரத்துப்பேசிய தேசிய காங்கிரஸின் தலைமையினுடைய வெற்றிடம் காலத்தால் உணரப்படும் அது வரை அமைச்சர் பதவியென்பது வேண்டுமான ஒன்றல்ல...இன்று உலக வங்கியால் முன்னடுக்கப்பட்ட பல வீதி அபிவிருத்தி திட்டங்கள் திரும்பி செல்லுகின்ற நிலையை அடைந்திருக்கிறது. இது குறுகிய காலத்தில் அமைச்சரில்லாத வெற்றிடத்தை உணர்த்தி வைக்கிறது. கடந்த பத்து வருட கால அமைச்சு பதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் வேலைவாய்ப்புகள் தொடர்பில் அனைத்து பிரதேச மக்களும் மீட்டலுக்குட்பட்டு யாரால் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என சிந்திக்கவேண்டும். வெறுமனே தனி நபர் பதவியலங்காரங்கள், அதிகார துஷ்பிரயாகங்கள், எதிரணியினருடைய அரச சேவையாளர்களினுடைய மாறுதல்கள் மூலம் ஆக்கபூர்வமாக விடயங்களை அடைந்து விட முடியாது.

வெளிநாட்டு உறவுகள் இலங்கை முஸ்லீம்களுக்கு பொதுபலசேன அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் அநியாயங்கள் தொடர்பாகவே ஆட்சி மாற்றத்தை கோரி நின்றார்கள். அது போக இறுதி வரை மகிந்த ராஜபக்ச வை துதிபாடியவர்கள் இன்று அந்த வெற்றியையும் அவ்வுறவுகளையும் உரிமை கொண்டாட நினைப்பதுதான் இப்போதைக்கு வேடிக்கையானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -